ராணிப்பேட்டையில் ரவுடி வெட்டி கொலை

Filed under: தமிழகம் |

பானாவரத்தில் ரவுடி சரத்குமாா் (22) கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி படுகொலை

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த புதூர் மலைமேடு கிராமத்தில் உள்ள மயானம் அருகே கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டி 30 வயது மதிக்கத்தக்க நபர் படுகொலை – தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட SP தீபா சத்யன் IPS, DSP பிரபு ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரனையில் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியை சோ்ந்த அசோக்குமாா் என்பவிரன் மகன் ரவுடி சரத்குமாா்(22) என்பது தெரியவந்துள்ளது.


ஏற்கனவே பல வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளதால் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என மாவடட கண்காணிப்பாளா் தீபன்சத்யான் ராணிப்பேட்டை துணைகண்கானிப்பாளா் பிரவு தலைமையிலான போலிசாா் தனிபடை அமைத்து துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த நபா்களை தேடி வருகின்றனா்.