ராயல் என்பீல்ட் பைக் தீப் பிடித்தது!

Filed under: சென்னை |

ராயல் என்பீல்ட் பைக் ஒன்று சென்னையில் இன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வள்ளுவர் கோட்டம் சாலையில் இளைஞர் ஒருவர் ராயல் என்பீல்டு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வண்டியிலிருந்து புகை வந்ததால் அவர் வண்டியை விட்டு கீழிறங்கினார். அப்போது உடனே வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து இளைஞரும் உடனிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அருகே இருந்த ஹோட்டலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். அதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. வாகனம் வாங்கி 2 ஆண்டுகள்தான் ஆகியுள்ள நிலையில் வாகனம் தீப்பற்றி எறிந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.