ரூ.1.5 கோடி சொத்துக்களை அரசுக்கு வழங்கிய முதியவர்!

Filed under: இந்தியா |

85 வயது முதியவர் ஒருவர் பெற்ற பிள்ளைகளால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக ஒன்றரை கோடி ரூபாய் சொத்துக்களை அரசுக்கு எழுதி வைத்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நாத் சிங் 85 வயது முதியவர் கடைசி காலத்தில் தன்னை பெற்ற பிள்ளைகள் கவனித்துக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து அவர் பிள்ளைகளால் மனவிரக்தி அடைந்து தனக்கு சொந்தமான 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உத்தர பிரதேச மாநில அரசுக்கு வழங்குவதாக உயிர் எழுத்து வைத்துள்ளார். அதுமட்டுமின்று எனது இறப்புக்கு கூட பிள்ளைகள் இறுதி சடங்கு செய்யக்கூடாது என்றும் எனது நிலத்தில் என் பெயரில் பள்ளியோ மருத்துவமனையோ அரசு கட்டிக் கொள்ளலாம் என்றும் தனது உயிலில் அவர் தெரிவித்துள்ளார். பெற்ற பிள்ளைகள் கவனிக்காமல் ஏற்பட்ட விரக்தி காரணமாக 85 வயது முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான ஒன்றரை கோடி மதிப்பு சொத்துக்களை அரசுக்கு எழுதி வைத்த தகவல் அம்மாநில மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.