ரூ.100க்கு மெட்ரோவில் விருப்பம் போல் பயணம்!

Filed under: சென்னை |

ரூ.50 கட்டணத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் விருப்பம்போல் பயணம் செய்யலாம் என்ற வசதி ஒரு சில ஆண்டுகளுக்குமுன் இருந்தது. தற்போது மெட்ரோ ரயிலில் ரூபாய் 100 கட்டணத்தில் விருப்பம்போல் பயணம் செய்யலாம் என்ற வசதியை பயணிகளுக்கு கொண்டு வந்திருப்பதாக மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

100 ரூபாய் பயண அட்டையை மெட்ரோ ரயில் நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் சென்று வரலாம். கடைசி பயணத்தை முடிக்கும் போது ரயில் நிலைய கவுன்டரில் பயண அட்டையை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். பயண அட்டையை திருப்பிக் கொடுப்பவர்களுக்கு 50 ரூபாய் திருப்பிக் கொடுக்கப்படும். இதேபோல் ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் செலுத்தி மாதாந்திர விருப்பம் போல் பயணம் செய்யலாம். பொதுமக்கள் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.