லண்டன் சொத்து குறித்து டி.டி.வி.தினகரன் பேட்டி!

Filed under: அரசியல்,தமிழகம் |

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் லண்டனில் “எனக்கு சொத்து இருந்தால் அதை தாராளமாக அரசுடமையாக்கலாம், அல்லது நானே அரசுடைமையாக்கி தருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரனுக்கு லண்டனில் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த டிடிவி தினகரன், ‘லண்டனில் எனக்கு சொத்து இருந்தால் அதை தாராளமாக அரசுடமையாக்கலாம், அல்லது அந்த சொத்து இருப்பதை நிரூபித்தால் அந்த சொத்தை நானே அரசுடமையாக்கி தருகிறேன். ஓபிஎஸ் நடத்தும் திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்தால் அதில் கலந்து கொள்வது குறித்து ஆலோசிப்பேன்” என்றும் அவர் கூறினார்.