லோகேஷூக்கு உலகநாயகன் அறிவுரை!

Filed under: சினிமா |

உலகநாயகன் கமலஹாசன் இயக்குனர் லோகேஷூக்கு “ரசிகர்களின் அன்புக்கு பதில் இதை செய்யுங்கள்” என அறிவுரை கூறியுள்ளார்.

தற்போது மக்களிடையே ஹாட் டாப்பிக்காக பேசப்படும் திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீசாகும் முதல் படம் “விக்ரம்.” முதல்நாளிலேயே உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. இப்படி ஒரு வரவேற்புக் கிடைத்த நிலையில் இயக்குனர் லோகேஷ் “ரசிகர்களின் இந்த அபரிமிதமான அன்புக்கு பதிலாக நான் என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை.” என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த டுவிட்டுக்கு பதிலளித்த கமல் “ரசிகர்களுக்கு அன்புக்கு பிரதிபலனாக நீங்கள் செய்யவேண்டியது திருப்தி அடையாமல் இருப்பதுதான். அவர்களுக்கு நேர்மையாக முதுகொடியும் அளவுக்கு வேலை செய்யுங்கள். அதைதான் அவர்கள் விரும்புவார்கள்” என அறிவுரை கூறியுள்ளார்.