லோகேஷ் விருப்பத்தை ஏற்பாரா விஜய்?

Filed under: சினிமா |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய் நடிக்கப்போகும் திரைப்படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்.திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்டு எப்போது வெளியாகுமென ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். விஜய்67 படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்து வருகிறார் லோகேஷ். லோகேஷின் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ள இப்படத்தில் விஜய்க்கு, இந்தி நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், பிரித்விராஜ் உட்பட 6 வில்லன்கள் நடிக்கவுள்ளனர். மேலும், “கைதி” படத்தில் பாடல்கள் இருந்தால் திரைக்கதை ஓட்டத்தில் சஸ்பென்ஸ் இருக்காது என்பதால் பாடல்களே வைக்கவில்லையாம். அதேபோல் விஜய் 67 படத்திலும் பாடல்கள் இல்லாமல் திரைக்கதை அமைத்து வருவதாகவும், இது விஜய் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், விஜய்யின் படங்களில் பாடல்கள்தான் செம தூக்கலாக இருக்கும் என்பதால் இப்படத்தில் லோகேஷ் விருப்பத்திற்கு ஏற்ப விஜய் சம்மதிப்பாரா? இல்லை லோகேஷ் விருப்பத்திற்கு மாறாக பாடல்கள் இருக்க உத்தரவிடுவாரா? என சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன.