வடசென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை?

Filed under: சென்னை |

வருமானவரித்துறையினருக்கு வடசென்னை தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும் பரிசு பொருள்கள் தரப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானதால் அத்தொகுதியில் அதிரடியாக சோதனை செய்தனர்.

வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் பணப்பட்டுவாடா நடப்பதாக கூறப்படுகிறது. வடசென்னை தொகுதியில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருள்கள் வழங்க இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். இன்று காலை முதல் சென்னை ஓட்டேரி, ஏழு கிணறு உள்பட ஐந்து இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சோதனை செய்து வரும் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.