வயது வித்தியாசம் பயன்படுத்திக்கொண்ட நண்பன், சீரழிந்த குடும்பம் !!

Filed under: புதுச்சேரி |

வயது வித்தியாசம் பயன்படுத்திக்கொண்ட நண்பன் !!!

புதுச்சேரியைச் சேர்ந்த 41 வயதாகும் கந்தசாமி. பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பலியானார். இது குறித்த வழக்கை விபத்து எனப் பதிவு செய்த போலிஸார் வழக்கு விசாரணையை நடத்தி வந்தனர். ஆனால் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறந்த கந்தசாமியின் தாயாரிடம் விசாரணை நடத்திய போலிஸார் அவர் சொல்லிய தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். கந்தசாமிக்கு புவனேஸ்வரி என்ற 28 வயதான மனைவி உள்ளார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அதிக வயது வித்தியாசம் இருந்ததால் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லவில்லை.

அதைப் பயன்படுத்திக் கொண்டு புவனேஸ்வரியிடம் பழக ஆரம்பித்துள்ளார் கந்தசாமியின் நண்பர் ஸ்ரீதர். ஸ்ரீதரும் கந்தசாமியுடன் பணிபுரிவதால் அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் கந்தசாமி. புவனேஸ்வரி மற்றும் குழந்தைகளுக்கு அதிகமாக பரிசுப் பொருட்கள் வாங்கி வந்து கொடுத்து பழக ஆரம்பித்துள்ளார் ஸ்ரீதர்.

ஒரு கட்டத்தில் புவனேஸ்வரி – ஸ்ரீதர் பழக்கம் எல்லை மீறுவதை உணர்ந்த கந்தசாமி மனைவியைக் கண்டித்துள்ளார். இது சம்மந்தமாக தகராறு ஏற்படவே அதன் பின்னர் எந்த ஆணுடனும் பேசக் கூடாது எனக் கூறியுள்ளார். இதனால் புவனேஸ்வரி கணவரோடு சண்டை போட்டு தாய் வீட்டுக்கே சென்றுவிட்டார். இந்நிலையில் தன் மனைவி மற்றும் நண்பருக்கு இடையிலான கள்ளக்காதல் பற்றி தன் தாயிடம் சொல்லி புலம்பியுள்ளார் கந்தசாமி.

மேலும் போனில் பேசும் போது ’இதுவே தான் கடைசியாக உங்களிடம் பேசுவதாக இருக்கலாம்’ எனக் கூறி புலம்பியுள்ளார். இந்த ஆதாரங்களை வைத்து போலீஸார் புவனேஸ்வரி மற்றும் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். புவனேஸ்வரி இந்த யோசனையைக் கொடுக்க, ஸ்ரீதர் தன் நண்பர் பிரவீன் குமார் என்பவரின் மூலம் இந்த கொலையை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் மூவரையும் கைது செய்துள்ளனர்.

©நெற்றிக்கண்