வருமான வரித்துறை சோதனை!

Filed under: தமிழகம் |

வருமான வரித்துறை தமிழகத்தில் இன்று திடீரென்று 20 அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சோதனை செய்தனர்.

வருமானவரித் துறையினர் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது தமிழகத்திலுள்ள பிரபலங்களின் வீடுகளில் மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை செய்து வருகின்றனர். மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.