வருமான வரி ஏய்ப்பு செய்பவர் களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வருமான வரிஏய்ப்பு தொடர்பாக நடப்பு நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் வரை 628 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 56 வழக்குகள் வெளிநாட்டு வருவாய் தொடர்பானவை.
மேலும் இந்த நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை ரூ.582 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித் துறை பறிமுதல் செய்துள்ளது. இதுவரை 414 நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற சோதனையின்போது, சம்பந்தப் பட்ட நபர்கள் ரூ. 6,769 கோடி மதிப்பி லான வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்று ஒப்புக்கொண் டுள்ளனர்.
வருமான வரி துறை விசாரணை இதுவரை சிவில் சட்டத்தின் அடிப் படையில் நடைபெற்றது. இனிமேல் வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய வழக்குகள் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்படும்.
இதன்படி வருமான வரி சட்டம் 1961, பிரிவு 276சி-ன் படி வரிஏய்ப்பில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.