வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை!

Filed under: தமிழகம் |

வானிலை மையம் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, தெற்கு ஆந்திராவில் பகுதியாக வலுவிழந்துள்ளது. எனவே, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில், காற்று பலமாக வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.