வாட்ஸ் அப்பின் அதிரடி அறிவிப்பு!

Filed under: உலகம் |

வாட்ஸ் அப் நிறுவனம் இனி ஒரு சில ஐபோன் மாடல்களில் வாட்ஸ் அப் சேவை கிடையாது என அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5சி மாடல் ஸ்மார்ட் போன்களில் வரும் அக்டோபர் மாதம் முதல் வாட்ஸ் அப் சேவை கிடையாது என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல ஐபோன் 10 மற்றும் ஐபோன் 11 இயங்குதளங்களில் விளங்கும் ஐபோன்களில் அக்டோபர் 24 முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இதனால் போன் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கையை வாட்ஸ்அப் நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஐபோன் உபயோகிக்கும் பயனாளர்களுக்கும் வாட்ஸ்அப் சேவை தொடரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஐ போன் பயனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.