“வாத்தி” சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Filed under: சினிமா |

வெங்கி அட்லுரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள “வாத்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்த மாதம் ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ளது. தனுஷ் எழுதிய இப்பாடலை ஸ்வேதா மேனன் பாடியுள்ளார். இப்பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளார். இப்பாடல் யூ டியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. மெலடி பாடலாக அமைந்திருக்கும் இப்பாடலை இசை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். தனுஷ், சம்யுக்தா ஹெக்டே, சாய் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீசாக உள்ளது.