வாய்ப்பிருந்தால் கமலுடன் நடிப்பேன்; நதியா!

Filed under: சினிமா |

தமிழ் சினிமாவில் 80களின் இறுதி மற்றும் 90களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை நதியா. அதன் பின்னர் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலான அவர் மீண்டும் “எம் குமரன்” திரைப்படம் மூலமாக நடிக்க வந்தார். அம்மாவாகவும் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் தனது இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் கமல் கூட எந்த திரைப்படத்திலும் நடிக்கவே இல்லை. கமல் நடிப்பில் 1986ம் ஆண்டு உருவான “விக்ரம்” திரைப்படத்திலேயே அவர் தமிழில் அறிமுகமாக இருந்தார். ஆனால் கமல் அவரை அந்த படத்துக்காக தேர்வு செய்யவில்லை. இப்போது “எல்ஜிஎம்” திரைப்படத்தில் நடித்துள்ள நதியாவிடம் கமல்ஹாசனோடு இணைந்து நடிப்பது எப்போது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “கமல்ஹாசனும் நடிக்கிறார், நானும் நடிக்கிறேன். வாய்ப்பு அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம்” எனக் கூறியுள்ளார்.