விஜய்யின் அரசியல் குறித்து ஜெயம் ரவி கூறிய பதில்!

Filed under: அரசியல்,சினிமா |

திருப்பதி ஏழமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு சென்ற நடிகர் ஜெயம் ரவியிடம் செய்தியாளர்கள் விஜய்யின் அரசியல் கட்சி குறித்த கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் சமீபத்தில் தொடங்கினார். அவரது அரசியல் கட்சி குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள “சைரன்” திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளதால், அவர் தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று சென்றார். ஏழுமலையானை தரிசித்து விட்டு அவர் வெளியே வந்தவரிடம் செய்தியாளர்கள் விஜய் அரசியல் கட்சி தொடர்புடைய கேள்விக்கு ஜெயம் ரவி பதிலளிக்க மறுத்துவிட்டார். இது கோவில், இங்கு அரசியல் பேச வேண்டாம், அது மட்டுமின்றி என்னுடைய படத்தை பற்றிய கேள்வி மட்டும் கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன், மற்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று அவர் கூறினார்.