விஜய் திரைப்படம் மீண்டும் தொடக்கம்

Filed under: சினிமா |

ஏற்கனவே முதல் கட்டமாக நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது.

இன்றைய படப்பிடிப்புக்காக விஜய் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாகும் இத்திரைப்படத்தை வம்சி இயக்குகறி£ர். தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாகிறார். விஜய்யின் தந்தையாக சரத்குமார், சகோதரராக ஷாம் ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.