விஜய் தேவரகொண்டாவின் காதலி யார்!

Filed under: சினிமா |

விஜய் தேவரகொண்டா “லைகர்” படத்துக்குப் பின் அடுத்த படமாக “குஷி” உருவாகி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் ரிலீசானது. படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடந்து வருகின்றன.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் இரண்டு கைகள் ஒன்றின் மேல் ஒன்று இருக்க “நிறைய நடக்கின்றன. ஆனால் இது ஸ்பெஷலானது. சீக்கிரம் அறிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகாவோடு காதலில் இருப்பதாக தகவல்கள் பரவ, அதை இருவருமே மறுத்தது குறிப்பிடத்தக்கது.