நேற்று உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தை மக்கள் தங்களின் வீட்டிலேயே சிறப்பாக கொண்டாடினர். விநாயகர் சதுர்த்திதுக்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதன் பின்பு அமெரிக்காவில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் இந்து மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதை அடுத்து நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவரின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, விநாயகர் சதுர்த்தி நாளில் அஜித் சார்ருக்கு நன்றி என பதிவிட்டு இருந்தார்.
அவரின் ட்விட்டர் பதிவில்; அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி..அமர்க்களம் படத்தில் முதல் பாடலான மகா கணபதியில் எனது நடன இயக்குனர் தொழில் தொடங்கியது. இந்த நேரத்தில், இந்த வாய்ப்பு அளித்த இயக்குனர் சரண் சார் மற்றும் நடிகர் தல அஜித் சார் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கணபதி ஆண்டவர் என்னை ஆசீர்வதித்ததைப் போல உங்கள் விருப்பங்களையும் நிறைவேறட்டும்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.