சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. “மாஸ்டர்” படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு என்பது உச்சகட்டமாக உள்ளது.
இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது. படத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட பன்மொழி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்போது ஹாலிவுட் நடிகர் ஒருவரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வரும் நடிகர் டென்சில் ஸ்மித் “லியோ” படத்தில் ஒரு வேடத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “லியோ” படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.