விஜய் பிறந்த நாளில் ‘லியோ’ பர்ஸ்ட்லுக்!

Filed under: சினிமா |

கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்திற்குள் முழுமையாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் இடம்பெற்ற “நான் ரெடி” பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பாடலை விஜய், அனிருத் மற்றும் அசல் கோலார் ஆகிய மூவரும் பாடியுள்ளனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு “லியோ” படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாளை பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் சிங்கிள் பாடல் என இரண்டு அப்டேட்டுகள் ‘லியோ’ படத்திலிருந்து வருவதால் விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விஜய், திரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். இத்திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளது.