“பதான்” திரைப்படத்தின் டீசர் “கேஜிஎப்”, “ஆர்ஆர்ஆர்” ஆகிய திரைப்படங்களையே மிஞ்சும் அளவிற்கு உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில், இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் புதிய திரைப்படம் “பதான்.” இப்படத்தில் ஷாரருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார். ஷாருக்கான் இந்தி சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, சமீபத்தில் “பதான்” திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. யஷ்ராஜ் பிலிம்ஸின் 50வது ஆண்டை (தொடக்கம் 1970) விழாவை சிறப்பிக்கும் வகையில், வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதியன்று, ரிலீசாகவுள்ளதாகவும் குறிப்பிட்டு, இப்படத்தில் ஜான் ஆப்ரகாமின் போஸ்டரையும் சமீபத்தில் படக்குழு ரிலீஸ் செய்தது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரெயிலர் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர். தற்போது பிரபல ஊடகவியலாளர் உமர் சந்து, “பதான்” தி¬ப்பட டீசர், “கேஜிஎப்,” “ஆர்.ஆர்.ஆர்,” “பாகுபாலி” ஆகிய பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு தந்தையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஷாருக்கான் மீண்டும் இப்படத்தின் மூலம் கிங் கானாக வலம் வருவார் என்றும், இப்படம் சினிமாவில் புதிய ஆக்ஷனுக்கான தொடக்கமாக இருக்கும் என கூறியுள்ளார்.