இது குறித்து பூங்காவின் செய்தி தொடர்பாளரான ரியாஸ் அகமதுகான் கூறும்போது, ‘புலியின் இடத்தில் குதித்த மக்ஸுத்கான்தான் சம்பவத் துக்கு காரணம். அவர் கடந்த 4 வருடங்களாக மனநிலை சரியில் லாதவராக இருந்திருக்கிறார். சம்பவத்தன்று அன்று அவர் போதைமருந்து சாப்பிட்டு இருந் ததாகவும் அவருடன் இருந்த நண் பர்கள் தெரிவித்துள்ளனர்’ என்கிறார்.

டெல்லியின் ஆனந்த் பிரபாத் பகுதிவாசியான மக்ஸுத், பிஹாரை சேர்ந்தவர். அவர் மனநலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார் என அவரது குடும்பத்தினரும் உறுதிப் படுத்தி யுள்ளனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பின் மக்ஸுத்தின் உடல் அவரது தாய் இஷ்ரத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில், அங்கிருந்த பூங்கா காவலர்களிடம் விலங்குகள் மீது மயக்க ஊசியை ஏவும் துப்பாக்கி இருந் திருந்தால் மக்ஸுத்தை காப்பாற்றி இருக்கலாம் எனவும் புகார் எழுந் துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ரியாஸ், ‘சுமார் அரை கி.மீ தொலைவில் உள்ள விலங்குகள் மருத்துவமனையில் இருந்து துப்பாக்கியை எடுத்து வருவதற்கு நேரம் இருந்திருக்காது’ எனத் தெரிவித்தார்.

பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

புலியிடம் சிக்கி இளைஞர் பலியான சம்பவத்தில் பாதுகாப்பு குறை பாடுகள் குறித்து மத்திய வனத் துறை அமைச்சகம் சார்பில் விசா ரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள உயிரியல் பூங்காக்களில் பாது காப்பை பலப்படுத்த நட வடிக்கை எடுக்கப்படும் எனக் கருதப் படுகிறது.

சுமார் 176 ஏக்கர் பரப் பளவில் உள்ள டெல்லி உயிரியல் பூங்கா நாட்டில் மிகவும் பழமையான தேசிய பூங்காக்களில் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் குறைந்தபட்சம் சுமார் 5000 பார்வையாளர்கள் வருவது வழக்கம். இங்குள்ள 6 வெள்ளை புலிகளை அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிடு கின்றனர். அதில், ஒன்றான விஜய் எனும் பெயருடைய 6 வயது வெள்ளை புலி தான் இளைஞரை கொன்றுவிட்டது.

புலியிடம் சிக்கிய மக்ஸுத் சுமார் 10 நிமிடங்கள் கைகூப்பி வணங்கியபடி புலி முன்பு கதறி அழுவதையும், அதை மவுனமாக பார்த்துக் கொண்டிருந்த புலி திடீர் என அவரது கழுத்தை கவ்வி இழுத்துச் சென்று கொன்ற வீடியோ காட்சி இப்போது நாடு முழுவதும் செல்போன் மற்றும் இணையதளத்தில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக் கிறது.