அயோத்தி தீட்சிதர் கொரோனா வைரஸால் பாதிப்பு!

Filed under: இந்தியா |

அயோத்தி ராமர் கோவிலின் பூமி பூஜைக்காக சடங்குகள் செய்யும் குழுவில் உள்ள தீட்சிதர் மற்றும் அங்கு காவல் வேலையில் இருந்த 15 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். கொரோனா வைரஸ் காரணத்தினால் 200 பேருக்கு மட்டும் பூமி பூஜையில் பங்கேற்க அறக்கட்டளை சார்பாக அனுமதிப்படுத்துள்ளது.

மேலும், இந்த விழாவுக்கு பக்தர்கள் எவரும் வர வேண்டாம் எனவும் டிவி அல்லது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பில் மக்கள் காணலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது பூமி பூஜைக்காக சடங்குகள் செய்யும் குழுவில் இருக்கும் தீட்சிதர் ஒருவரும் மற்றும் காவல் வேலையில் இருந்த 15 காவலர்களுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.