வேலுமணிக்கு எதிராக கடும் எதிர்ப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சங்கம் முன்னாள் அமைச்சர் வேலுமணிகாக மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்பி ராஜூ என்பவர் ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பை அடுத்து வேலுமணி சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் எஸ்.வி.ராஜூ விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.