வேலூர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு தடை!

Filed under: தமிழகம் |

பள்ளி மாணவர்கள் கம்மல், செயின், காப்பு அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது கம்மல், செயின், காப்பு, கயிறு போன்றவை அணியக்கூடாது. தலையில் எண்ணெய் வைத்து தலை வாரவேண்டும். மாணவ மாணவியருக்கு டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை. இதுபோன்ற நிபந்தனைகளை வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சமூக பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.