“ஷாம்ஷேரா” டீசர் வெளியீடு!

Filed under: சினிமா |

“ஷாம்ஷேரா” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ரன்பீர் கபூர் நடித்து வருகிறார்.

தென்னிந்தியாவின் மொழிகளில் எடுக்கப்படும் படங்கள் இந்தியில் வசூலை வாரி குவித்து வருகின்றன. தென்னிந்தியாவை குறி வைத்து தனது படங்களை பேன் இந்தியா படமாக வெளியிட தொடங்கியுள்ளார் ரன்பீர் கபூர். முன்னதாக ரன்பீர் கபூர் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் “பிரம்மாஸ்திரா” படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கான டிரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது கரன் மல்ஹோத்ரா இயக்கத்தில் “ஷாம்ஷேரா” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ரன்பீர் கபூர். பிரிட்டிஷ் படையினரால் அழிக்கப்படும் ஒரு பழங்குடி இனமும் அவர்களுக்காக போராடும் ஷாம்ஷேரா என்ற பழங்குடி வீரனின் கதைதான் இந்த இப்படம். இத்திரைப்படமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பேன் இந்தியா படமாக வெளியாக உள்ளது.