ஷாருக்கானின் மனைவி மீது மோசடி புகார்!

Filed under: சினிமா |

பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் மீது மோசடி புகார் அளித்துள்ளார்.

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் ஷாருக்கான். இவரது மனைவி கவுரி கான் சினிமா தயாரிப்பாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும், கவுரி கான் டிசைன்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஷாருக்கானின் மனைவி கவுரி கான் மீது பிரபல தொழிலதிபர் ஜஸ்வந்த் ஷா லக்னோவில் துல்சியானி நிறுவனம் மீது போலீசில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் 409 என்ற பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதன்படி, “துல்சியானி கட்டுமான நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு வாங்க முன்பணம் ரூ.86 லட்சம் கொடுத்திருந்ததாகவும், ஆனால், அவருக்கு நிறுவனம் குடியிறுப்பை ஒதுக்காமல், பணத்தை ஏமாற்றுவதாகத் தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டார் ஷாருக்கானின் மனைவி கவுரிகான் என்றும், அவர் விளம்பரம் செய்ததால்தான் அந்த பிளாட்டை வாங்கியதாகவும்,’’ புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில், லக்னோவில் உள்ள துல்சியானி நிறுவன எம்டி அனில்குமார், இயக்குனர் மகேஷ் துல்சியானி, ஷாருக்கானின் மனைவி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.