ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

Filed under: சென்னை,தமிழகம் |

ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

அரசு மீது ஸ்டாலின் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, கொரோனா காலம் முடியும் வரையிலாவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பேரிடரிலும் அரசியல் செய்து மக்களை குழப்பும் திமுக, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை மனச்சோர்வு அடையும்படி செய்வதாக விமர்சித்துள்ளார்.

ஒன்றிணைவோம் திட்டத்தால் தான் பலருக்கு கொரோனா பரவியது. நிவாரணம் வழங்குவதாக கூறி, ஒட்டுமொத்த மக்களின் மன நிம்மதியை கெடுத்துவிட்டார் ஸ்டாலின் என குற்றம்சாட்டியுள்ளார்.