சென்னையில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்தியதில் 8,000 பேர் தொற்றால் பாதிப்பு!

Filed under: சென்னை |

சென்னையில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்தியதில் 8,000 பேரும் மற்றும் மருத்துவ முகாம்கள் கொண்டு நடத்தியதில் 5,400 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள அத்திப்பட்டில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு நிருபர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியது: முதலில் இரண்டு அறிகுறிகள் இருப்பவர்களை கண்காணித்து வந்தனர் தற்போது ஒரு அறிகுறிகள் இருந்தாலே உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.