ஸ்ரீமதியின் செல்போனை பெற மறுத்த நீதிமன்றம்

Filed under: தமிழகம் |

நீதிமன்றம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததையடுத்து அவருடைய செல்போனை ஒப்படைக்கும் படி உத்தரவிட்டிருந்தது.

மாணவி ஸ்ரீமதியின் தாயார் அவருடைய செல்போனை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வந்த போது அந்த செல்போனை வாங்க மறுத்த நீதிமன்ற அதிகாரிகள் அந்த செல்போனை சிபிசிஐடி விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து ஸ்ரீமதியின் தாயார் அந்த செல்போனை சிபிசிஐடி விசாரணை அலுவலகம் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த செல்போனில் என்னென்ன இருக்கும் என்பது குறித்து இனிமேல் தான் ஆய்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.