ஸ்ரீமதியின் தாயார் கட்சித்தலைவர்களை சந்தித்து மனு!

Filed under: தமிழகம் |

கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி இறந்து 30 நாட்கள் கடந்த நிலையில் அவரது தாயார் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் ஸ்ரீமதியின் தாயார் கூறும்போது, “ஸ்ரீமதி இறந்து இன்றோடு 30 நாட்கள் ஆகிவிட்டது. இது திட்டமிட்ட கொலைதான். ஆனால் கொலை செய்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கிறது. எனவே ஒரு தாயின் உணர்வை புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்திக்க உள்ளேன். அதுபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்து மனு அளிக்க உள்ளேன். அதுமட்டுமின்றி வேறு சில அரசியல் கட்சிகளின் தலைவர்களின் சந்திக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.