ஸ்ரீமதி தாயின் சந்தேகம்!

Filed under: தமிழகம் |

ஸ்ரீமதியின் தாயார் 2 மாணவிகள் ரகசிய வாக்குமூலம் அளித்ததில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த மாணவியின் இரண்டு தோழிகள் இன்று நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீமதியின் தாயார், ‘ரகசிய வாக்குமூலம் கொடுத்த இரண்டு மாணவிகள் உண்மையில் ஸ்ரீமதி தோழிகளா என்பதை நாங்கள் அறிய வேண்டும் என்றும் அந்த தோழிகள் யார் என்பதை எங்களுக்கு குறிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். சிபிசிஐடி தங்களுக்கு அந்த தகவலை தெரிவித்தால் அந்த தகவலை நாங்கள் ரகசியமாக காத்து வைப்போம் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஸ்ரீமதிக்கும் தோழிகள்தான் வாக்குமூலம் கொடுத்தாரா அல்லது பள்ளி நிர்வாகம் செட்டப் செய்ததா என்பது குறித்தும் எங்களுக்கு தெரிய வேண்டும் என்றும் அவர் கூறினார். ஸ்ரீமதியின் தாயார் எழுப்பிய இந்த சந்தேகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.