ஹாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசன்!

Filed under: சினிமா |

“லாபம்” திரைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் விஜய் சேதுபதியோடு நடித்த லாபம் திரைப்படம் வெளியானது.

ஸ்ருதிஹாசன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகையாக்கியது. தெலுங்கில் அறிமுகமானதிலிருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக “சலார்” படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இப்போது ஹாலிவுட் படமான “தி ஐ” என்ற ஹாலிவுட் சைக்காலஜி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் மார்க் ரோலி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.