திடீரென நேற்றிரவு சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியதால் உலகம் முழுதும் உள்ள பயனாளர்கள் கடும் அவதிப்பட்டனர். டுவிட்டர் உள்ளிட்ட மற்ற அனைத்து சமூக வலைதளங்களும் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இயங்கியது. மார்க் அவர்களுக்கு சொந்தமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் திடீரென ஏன் முடங்கியது.
சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இயங்கியது. மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் ஒரு மணி நேரம் முடங்கியதால் சுமார் 23 ஆயிரத்து 127 கோடி அந்நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ப்ளூம்பெர்க் குறியீட்டில் மார்க் அவர்களின் சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் 2.7 பில்லியன் டாலர் குறைந்து தற்போது 176 பில்லியன் டாலராக உள்ளது. இருப்பினும் உலகில் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் தக்க வைத்துள்ளார்.