அஞ்சல்துறை கடலை மிட்டாய் வியாபாரம் செய்வதாக தெரிவித்துள்ளது.
புவிசார் கோவில்பட்டி கடலைமிட்டாயை இந்திய அஞ்சல் துறை இந்தியாவில் உள்ள எந்த பகுதிக்கும் அனுப்புவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இந்நிலையில் இந்த கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் அஞ்சல் துறை மூலமாக விற்பனை செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எங்கிருந்தாலும் தபால் நிலையங்களில் ரூபாய் 390 கொடுத்து ஒரு கிலோ கடலை மிட்டாய் பாக்கெட்டை பெறலாம். ஆர்டர் செய்யப்பட்ட கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் தபால் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.