அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்கு தயாராகும் விடுதலை 2 படக்குழு!

Filed under: சினிமா |

வெற்றிமாறன் இயக்கத்தில் மார்ச் 31ம் தேதி வெளியான “விடுதலை” திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டனர். இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் “விடுதலை”யும் இணைந்துள்ளது.

சமீபத்தில் அடுத்த பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தில் தொடங்கியுள்ளது. 25 நாட்களில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாக ஷூட்டிங்குக்காக திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக்கு சென்ற படக்குழு, இப்போது ஐந்து நாட்கள் மட்டும் ஷுட்டிங் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளதாம். அடுத்த கட்ட ஷூட் விரைவில் தொடங்குமென கூறப்படுகிறது.