அண்டை நாடான இலங்கை போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
போதை பொருள் உலகம் முழுதும் மிக வேகமாக பரவி வருகிறது. போதைப்பொருளை தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை ஐந்து கிராமிற்கு அதிகமாக போதை பொருள் வைத்திருந்தால் அல்லது விற்பனையில் ஈடுபட்டாலும் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் செய்துள்ளது. இதன்படி போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.