மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை ராமேஸ்வரத்திலிருந்து பாதயாத்திரையை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அவர் இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.
மேலும் அண்ணாமலையின் பாதையாத்திரை துவக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி இந்த துவக்க விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமி இதில் கலந்து கொள்ளவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த திடீர் முடிவை எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.