பள்ளிகளைச் சுற்றி புகைப்பது அதிகரித்துள்ளதால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தர்மபுரி எம்பியும், பாமக தலைவருமான அன்புமணி ராமதஸ் தனது டுவிட்டரில், “சென்னையில் பள்ளிகளை சுற்றியுள்ள பொது இடங்களில் புகைப்பது அதிகரித்திருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் சிகரெட் புகையை சுவாசித்து பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பெரும் கவலையளிக்கிறது! ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மற்றவர்கள் செய்யும் குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடாது. அதற்காகத்தான் நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, பல்வேறு தடைகளைத் தகர்த்து பொது இடங்களில் புகைக்க தடை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றினேன்’’ என்று கூறியுள்ளார்.
Related posts:
முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2,42,160 கோடி முதலீடு: நிறைவுரையில் முதல்வர் ஜெயலலிதா மகிழ்ச்சி !
மத்திய அரசின் மகளிர் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டப் பரிசு.
மகளிர் விரோத பா.ஜ.க வை கண்டித்து சிவகங்கையில முன்னாள் அமைச்சரும் மானாமதுரை எம்.எல்.ஏவுமான தமிழரசி த...
மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தராக கல்யாணியை நியமித்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !



