மிகப்பெரிய ஏரியான மீட் ஏரி அமேரிக்காவில் வறண்ட நிலையில் காணப்பட்டு வருகிறது. அதில் மனித உடல்களாக கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
மிகப்பெரிய நீர் தேக்க ஏரியான மீட் ஏரி நாளுக்கு நாள் வறண்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் கடந்த 2001ம் ஆண்டு முதல் வேகமாக வளற தொடங்கிய ஏரி தற்போது முற்றிலும் வற்றும் நிலையில் உள்ளது.
ஆனால், ஏரியின் வறண்ட பகுதிகளிலிருந்து மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இரும்பு டின் ஒன்றிற்குள் மனித உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடல் 1970 வாக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட நபருடையது என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏரியில் கொன்று வீசப்பட்ட மேலும் பலரின் உடல்களும் அங்கு கிடைக்கலாம் என்று கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.