அமைச்சர் சாமிநாதன் “தமிழ்நாட்டில் தற்போதைக்கு செம்மொழி மாநாடு நடக்குவதற்கான திட்டம் ஏதும் இல்லை” என்று பேட்டியளித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களிடம், “தமிழ்நாட்டில் தற்போதைக்கு செம்மொழி மாநாடு நடத்துவதற்கான திட்டம் ஏதுமில்லை, ஆனால் அதே நேரத்தில் பல்வேறு நாடுகளில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக ரூபாய் 3 கோடி 2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் தமிழில் தான் கையொப்பம் இடவேண்டும் என்று அரசாணை உள்ளது. அதை மீறும் பட்சத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் அறிஞர்கள் விருது விரைவில் வழங்கப்படும்” என்று பதிலளித்தார்.