சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அம்மா உணவகம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி, திமுக ஆட்சியிலும் நடந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் சில அதிருப்திகள் ஏற்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய சென்னை மாநகராட்சி 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரூபாய் 5 கோடியில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களையும் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அம்மா உணவகங்களின் கட்டிடங்களை சீரமைப்பது, பழுதான பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றை மாற்றுவது ஆகிவற்றை செய்ய மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ருசியான புதிய வகை உணவுகளையும் அம்மா உணவகத்தில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.