சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அங்கு தயார் செய்யப்பட்ட இட்லியை சாப்பிட்டு பார்த்தார்.
இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நிருபர்களிடம் கூறுகையில், ஏழை, எளிய மக்களுக்காக அம்மா உணவகம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களால் பாராட்டப்பட்ட, இந்த திட்டம் மக்களுக்கு பெரிதும் பயன்படுகிறது. பல மாநிலங்களும் அமல்படுத்தியுள்ளன. ஒரு ரூபாய்க்கு இட்லி கிடைப்பது தமிழகத்தில் மட்டும் தான் என கூறினார்.