அரையாண்டு தேர்வுகள் நடக்குமா…? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

Filed under: Uncategory,தமிழகம் |

அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் இணையவழியாக அரையாண்டு தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மொடச்சூர், அயலூர், கலிங்கியம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் பணிகளைப் அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தனியார் பள்ளிகள் விரும்பினால் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வை இணையவழியில் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

50 விழுக்காடு பாடங்களைக் குறைப்பதுடன், எந்தெந்தப் பாடங்கள் நடத்தப்பட்டதோ அந்தப் பாடங்களில் இருந்து மட்டும் தான் வினாக்கள் இடம்பெறும் என்றும், தேர்வுக் கால அட்டவணை இரண்டு மூன்றுநாட்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

10, 11, 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது பற்றிய கேள்விக்கு அது மத்திய அரசின் நிலைப்பாடு, என்றும் தமிழக அரசின் நிலைப்பாடு அதுவல்ல என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.