‘ஆதித்யா எல் 1’ கவுண்டவுன் ஸ்டார்ட்

Filed under: இந்தியா,உலகம்,தமிழகம் |

‘ஆதித்யா எல் 1’ விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்டவுன் இஸ்ரோ நிறுவனத்தில் இன்று தொடங்கியது.

இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளியில் பல புதிய ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை படைத்து வருகிறது, சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தன. சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நாளை அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்-1  என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. அதன்படி, ‘ஆதித்யா எல் 1 விண்கலத்தை’ சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 57 என்ற ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான 24 மணி  நேர கவுண்டவுன் இன்று தொடங்கியது. அதன்படி  நாளைய தினம் காலை 11.50க்கு ‘ஆதித்யா எல் 1 ‘ விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.