மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – நடிகர் சோனு சூட் அறிவிப்பு!

Filed under: இந்தியா |

பாலிவுட் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் சோனு சூட். தற்போது இவர்தான் ரியல் ஹீரோ.

கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அவரால் முடிந்த உதவிகளை செய்து கொண்டுவருகிறார். இந்த ஊரடங்கு சமயத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்த புலன் பெயர்த்த பஸ் ரயில் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

அண்மையில் ஒரு விவசாயி அவருடைய இரு மகள்களை வைத்து ஏரில் பூட்டி உழுத இருந்தார். அந்த விவசாயிக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி பரிசாக கொடுத்தார். அதன் பின்பு காய்கறி விற்றுவந்த கம்ப்யூட்டர் பொறியாளருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்தார். இதுபோல பல உதவிகளைச் செய்து கொண்டுவருகிறார்.

தற்போது நேற்று முன்தினம் நடிகர் சோனு சூட்டுவின் பிறந்த நாள். அந்த நாளில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்த மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக தெரிவித்துள்ளார். நடிகர் சோனு உடன் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளது.