தெலுங்கானா அரசாங்கம் 800 ஆண்டுகள் பழமையான ஆல மரத்தைப் பாதுகாக்க, ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
800 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று தெலுங்கானா மாநிலத்திலுள்ள மெஹ்பூப் என்ற நகரில் உள்ளது. இந்த ஆலமரம் சிதிலமடைந்து வரும் நிலையில் அதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இதுகுறித்து அரசு ஆய்வு செய்து தற்போது இந்த மரத்தை பாதுகாக்க ரூபாய் 2 கோடி நிதியை தெலுங்கானா அரசு ஒதுக்கியுள்ளது. இது குறித்த தகவலை டி.ஆர்.எஸ் கட்சியின் எம்.பி.சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த ஆல மரம் சரிந்து விழுந்த வண்ணம் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.