தமிழக ஆளுநர் ரவி வேலைவாய்ப்பை பெருமளவிற்கு தமிழகத்தில் திறமையான இளைஞர்கள் இல்லை என தொழில் நிறுவனங்கள் கூறுகின்றன என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வேளச்சேரியிலுள்ள தனியார் கல்லூரியில் தமிழக ஆளுநர் ரவி நடைபெற்ற கருத்தரங்கத்தில் மாணவர்கள் மத்தியில் பேசியபோது, “நாட்டில் பல லட்சம் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கின்றனர். வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு கல்வி மட்டும் போதாது, தனித்திறமை வேண்டும். பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் தன்னை சந்தித்தபோது தமிழ்நாட்டு மாணவர்களிடம் வேலை வாய்ப்புக்கான போதிய திறன் இல்லை, தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமான திட்டம். இதனால் திறன்மிக்க இளைஞர்கள் உருவாகுவார்கள்” என்று அவர் கூறினார். இவ்வாறு அவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Related posts:
தேனி அருகே தாய்/மகள் இருவர் இறப்புக்கு காரணமானவர் கைது!
OBC பட்டியலிலிருந்து பல பிரிவுகள் நீக்கம்; மேல் முறையீடு செய்வதாக மமதா பானர்ஜி உறுதி.
பத்திரிக்கையாளர் போர்வையில் மிகவும் கீழ்தரமாக ஈடுபடுபவர்களுக்கு தேனி டிஸ்ட்ரிக் பிரஸ் கிளப் எச்சரிக்...
பொய் வழக்கு போட்டதாக அல்லிநகரம் காவல் நிலையம் முற்றுகை - பரபரப்பு