சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான “கேஜிஎஃப் 2” படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்திருக்கின்றனர் கமல்ஹாசனும்,- இளையராஜாவும்.
இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் ரூ.600 கோடிக்கு மேல் வசூல்சாதனை படைத்துள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்ததால் விரைவில் இப்படத்தின் 3வது பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளில் வெளியாகி பான் இந்தியாப் படமாக சாதனைப்படைத்துள்ள நிலையில், கேஜிஎப்-2 படத்தை நடிகர் கமல்ஹாசனும், இளையராஜாவும் தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளனர்.
மேலும், கேஜிஎப்-2 படத்தை இளையராஜா, கமல்ஹாசன் இருவரும் சேர்ந்து பார்த்த ஒரு புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கேஜிஎப்-2 படக்குழுவினரை இருவரும் பாராட்டியதாகக் கூறப்படுகிறது.